தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சந்திர கிரகணம்: திருப்பதியில் தரிசன நேரம் மாற்றம்

வரும் 25ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு, ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு புதன்கிழமை தெரிவித்தார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 2:12 am IST

வரும் 25ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு, ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சித்திரை மாத பெüர்ணமியை முன்னிட்டு, திருமலையில் ஏழுமலையானுக்கு 3 நாள்கள் வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெறுவது வழக்கம். மேலும் வரும் 25ஆம் தேதி பெüர்ணமி தினத்தில் சந்திர கிரகணமும் நிகழவுள்ளது. அன்று கடைசி நாள் வசந்தோற்ஸவ விழா என்பதால் காலை மற்றும் ஈவ்னிங் பிரேக் தரிசனமும், ரூ.300 கட்டண விரைவு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

ரூ.50 சுதர்ஸன டிக்கெட்கள் முன்பதிவு செய்த 6,800 பேர் மட்டும் அன்று காலை 10 மணிக்குள் வழிபாட்டுக்கு கோயிலுக்குள் வந்துவிட வேண்டும். தர்ம தரிசனம் மற்றும் அனைத்துவித தரிசனங்களும் மதியம் 1.30 மணிக்கே முடிக்கப்படும். மதியம் 3 மணிக்கு மஹா சுத்தி செய்து, பூலங்கி சேவையை சார்த்திய பின் கோயில் மூடப்படும். பிறகு மறுநாள் 26ஆம் தேதி காலை சுப்ரபாத சேவைக்கு கோயில் திறக்கப்படும் என்றார் அவர். தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஏற்ப பக்தர்கள் ஏழுமலையானை வழிபட வரும்படி தேவஸ்தானம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.