திருவண்ணாமலை அருகே அரசு ஜீப் மரத்தில் மோதிய விபத்தில், மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உதவி ஆணையர் இறந்தார்.
திருவண்ணாமலை, வேங்கிக்கால், தென்றல் நகரைச் சேர்ந்தவர் மு.ஜோதி (53). விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வந்தார். இக்கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) நடைபெற்றது.
இம்முறை செவ்வாய், புதன்கிழமைகளில் அமாவாசை வந்ததால், இரு நாள்களும் இரவு, பகலாக பல ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இரு நாள்களாக கோயில் பணியில் ஈடுபட்டிருந்த அவர், வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஜீப்பில் புறப்பட்டுள்ளார்.
ஜீப் ஓட்டுநர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், எலக்ட்ரீஷியன் ஒருவரின் உதவியுடன் அவலூர்பேட்டை வரை வந்துள்ளார். பின்னர், எலக்ட்ரீஷியனை இறக்கிவிட்டு விட்டு ஜோதி, தானே ஜீப்பை ஓட்டி வந்துள்ளார்.
மங்கலம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளிய மரத்தில் ஜீப் மோதியதாம். இடிபாடுகளில் சிக்கிய ஜோதி, அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த மங்கலம் போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த ஜோதி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேல்மலையனூர் கோயில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி சாந்தி, மகன் அருண்குமார், மகள் சுபா ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

