சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சூரிய மின்சக்தி தொழில்நுட்பம் குறித்த படிப்புகள் அறிமுகம்

சூரிய சக்தி மின் உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான புதிய பயிற்சித் திட்டங்களை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம்

Updated On :21 ஏப்ரல் 2013, 10:37 pm

சூரிய சக்தி மின் உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான புதிய பயிற்சித் திட்டங்களை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் பயிற்சித் திட்டங்களில் சேர ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டது. இதில் சூரிய மின்சக்தி மூலம் 2015-ம் ஆண்டுக்குள் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய மின் தேவையில் 6 சதவீதத்தை சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் துறை வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ப தொழில்நுட்ப நிபுணர்கள் தேவையும் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஃபோட்டோ வோல்டயிக் சோலார் எலெக்ட்ரிக் சிஸ்டம் மற்றும் சிறிய அளவிலான ஃபோட்டோ வோல்டயிக் சோலார் பொருள்கள் உற்பத்தி ஆகிய இரண்டு பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிக்களுக்கான கட்டணம் (பாட புத்தகங்கள் மற்றும் மதிய உணவு உள்பட) ரூ. 15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் சென்னை கிண்டி டி.ஐ. கட்டட வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மைய இணை இயக்குநர் ஜெயச்சந்திரனை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது 044 - 22501011, 8754590964 ஆகிய தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.