விழுப்புரத்தில் "செல்லப் பிராணிகள் திருவிழா' என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கண்காட்சிக்கு விழுப்புரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.பிரபாகரன் தலைமை வகித்தார். டிஐஜி முருகன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பதிவாளர் சி.பாலச்சந்திரன் வரவேற்றார். சிகிச்சை பிரிவு இயக்குநர் ரா.சீனுவாசன், கால்நடை மருத்துவர்கள் சி.டி.ஜெ.ராவ், என்.வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக் கண்காட்சியில் நாய்களுக்கு 6 விதமான போட்டிகள் நடைபெற்றன. சிறந்த நாட்டு நாய், புன்னகை அழகு, சிகை அழகு, நடை அழகு, மாறுவேடப் போட்டி, சிறந்த கலப்பின நாய் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இப் போட்டிகளில் டாபர் மேன், கோல்டன் உள்ளிட்ட பல்வேறு வகை நாய்கள் பங்கேற்றன. நாய்கள் அழகாக நடந்து சென்றும், வணக்கம் செலுத்தியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
அதேபோல், உடல் முழுவதும் ரோமங்கள் மிகுந்த நாய்கள், உடை அணிந்து வந்த நாய்களும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. இக் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட நாய்களுக்கு ஒரு முதல் பரிசு, ஒரு இரண்டாம் பரிசு, 2 மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற நாய்களுக்கு மாவட்ட ஆட்சியரின் துணைவியார் ஜானகி சம்பத் பரிசுகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

