சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஹோட்டலில் ரெளடி வெட்டிக் கொலை

செங்கல்பட்டு அருகே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரெளடியை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார் தேடி

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 4:35 am IST

செங்கல்பட்டு அருகே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரெளடியை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்துப் போலீஸார் தரப்பில் தெரிவித்தது: 

செங்கல்பட்டு பெரியநத்தம், தட்டான்மலைத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுதாகர்(28). ரெüடி. அவர் மீது போலீஸில், கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவர் சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு செங்கல்பட்டு புறவழிச்சாலை பழவேலி அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மொபெட்களில் வந்த 6 பேர், தங்கள் மொபெட்களை ஹோட்டலின் எதிரே நிறுத்தினர். பின்னர் ஹோட்டலுக்குள் புகுந்த அவர்கள், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த சுதாகர் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த செங்கல்பட்டு டி.எஸ்.பி. குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து சுதாகர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்துப் போலீஸார் கூறுகையில், முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்ததுள்ளதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி உத்தரவின் பேரில் எஸ்.பி. சேவியர் தன்ராஜ் மேற்பார்வையில், டி.எஸ்.பி. குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், மணிமாறன், முருகன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தெடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.