சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்துள்ளது.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் எஸ்.எஸ். விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பவுல் காந்தி என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த செல்லையா நாயக்கன்பட்டி மாரியப்பன் மகன் நடராஜன் (48) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









