கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆண்டிபட்டி அருகே விநோதமான திருவிழா

ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் விநோதமான முறையில் துடைப்பத்தால் அடிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மே 2013, 12:30 am IST

ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் விநோதமான முறையில் துடைப்பத்தால் அடிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மறவபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது. முதல் நாள் பொங்கல் வழிபாடும், மறுநாள் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. மூன்றாம் நாளான புதன்கிழமை அந்த கிராமத்தில் உள்ள மாமன், மைத்துனர் முறையில் உள்ளவர்கள் மீது துடைப்பத்தால் அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது, தெருவில் உள்ள சாக்கடையில் புரண்டும், சகதியில் துடைப்பத்தை தோய்த்தும் அடித்துக் கொண்டனர். மேலும் சிலர், சாக்கடையில் படுத்துக்கொண்டு தங்களது உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கிக் கொண்டனர். இது குறித்து, இக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், இத்திருவிழாவில் இப்பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதில், துடைப்பத்தால் அடித்துக் கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு வளரும். மேலும், கண் திருஷ்டி மற்றும் பில்லி, சூனியம் நீங்கி தோஷங்கள் விலகும். இதில், மாமன், மைத்துனர் இடையே மட்டும் அடித்துக் கொள்வதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.