ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம். யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நிலத்தடி நீரில் புளோரைடு கலந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை (மே 29) தொடங்கி வைத்துள்ளார்.
இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தில் நிறைவுபெறாத பணிகளை விரைவாக முடித்து அனைவருக்கும் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு காமராஜர் முதல்வராக இருந்தபோது 1960-ல் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அன்று ரூ.44 கோடியில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம் இன்று ரூ.1928 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்துக்கு காமராஜரின் பெயரைச் சூட்ட வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன.
குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கான அவினாசி அத்திக்கடவு குடிநீர்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக் கடலில் கலக்கும் நதிகளை திருப்பி, தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுவராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



