கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

முழு அடைப்புக்கு பாமக ஆதரவு

ஹிந்து அமைப்பைச் சேர்ந்தோர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையில் திங்கள்கிழமை (ஜூலை 22) பாஜக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On :21 ஜூலை 2013, 9:48 pm IST

ஹிந்து அமைப்பைச் சேர்ந்தோர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையில் திங்கள்கிழமை (ஜூலை 22) பாஜக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளரும், ஆடிட்டருமான ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

மேலும் இது தொடர்பான வழக்குகளில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.

ரமேஷின் படுகொலை உள்பட தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் படுகொலைகளைக் கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.