நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து நாகை வட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 36 பேரும், காரைக்கால் மாவட்டத்திலிருந்து 4 விசைப் படகுகளில் சென்ற 29 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தகவலறிந்த நாகை நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை ஆகிய மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தன்னெழுச்சியாக வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாகை அக்கரைப்பேட்டையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நாகை வட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் நாகூர் ஆர்யநாட்டுத் தெரு உள்ளிட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர். இதில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 74 பேரை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை மாலை பிடித்து கைது நடவடிக்கை இல்லாமல், எச்சரித்து அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை மாலை உறுதி செய்யப்படாத தகவல் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை

தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது! - முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன்! நேர்காணல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

