/

இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் வியாழக்கிழமை மாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 2:27 am IST

சென்னையில் வியாழக்கிழமை மாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையின் அளவு (மி.மீட்டரில்):

தேவலா (நீலகரிமாவட்டம்), அறந்தாங்கி மற்றும் திருமயம் - 30, சின்னக்கல்லாறு மற்றும் வால்பாறை தாலுகா அலுவலகம், மாமல்லபுரம், கல்பாக்கம் - 20, சீர்காழி, நீடாமங்கலம், வால்பாறை பிடிஓ, செய்யூர், தாம்பரம், காரைக்குடி, தேவகோட்டை, காட்டுமன்னார்

கோயில், சிதம்பரம் மற்றும் பெரியாறு - 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.