வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

"கடலோர பாதுகாப்புக்கு 20 அதிநவீன ரோந்துப் படகுகள்'

தமிழகக் கடலோர பாதுகாப்புக்கு, ரூ.160 கோடி செலவில் 20 அதிநவீன ரோந்துப் படகுகள் விரைவில் வாங்கப்படவுள்ளன என, கடலோரக் காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 1:20 am IST

தமிழகக் கடலோர பாதுகாப்புக்கு, ரூ.160 கோடி செலவில் 20 அதிநவீன ரோந்துப் படகுகள் விரைவில் வாங்கப்படவுள்ளன என, கடலோரக் காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கடலூர் துறைமுகம் பகுதியில், புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் 1,076 கி.மீ., தொலைவுள்ள கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள 591 மீனவ கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருக்கு இலவசமாக செல்போன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகக் கடலோர பாதுகாப்புக்கு, ரூ.160 கோடி செலவில் 20 அதிநவீன ரோந்துப் படகுகள் விரைவில் வாங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் 12 இடங்களில் கடலோரப் பாதுகாப்பு காவல் நிலையங்கள் உள்ளன. மேலும் 30 இடங்களில் இத்தகைய காவல் நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை மற்றும் தேவனாம்பட்டணத்தில் இந்த காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டில் நேரிட்ட 16 படகு விபத்துகளில், கடலில் தத்தளித்த 49 பேர் கடலோர காவல்படையால் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரைக் காணவில்லை. 10 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நேரிட்ட 22 படகு விபத்துகளில் 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். படகில் இலங்கைக்கு செல்ல முயன்று நடுக்கடலில் தத்தளித்த 120 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.