வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்க இலவச தொலைபேசி எண்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த தொலைபேசி எண்ணில் அழைத்து வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 1070 என்ற எண் கொண்ட தொலைபேசியும், சென்னை மாநகராட்சியில் 1913 என்ற எண் கொண்ட தொலைபேசியும், இதர மாவட்டங்களில் 1077 என்ற எண் கொண்ட தொலைபேசியும் செயல்படும். வெள்ள பாதிப்புகள் குறித்து இந்த எண்களில் தகவல் அளிக்கலாம். இந்த தொலைபேசிகளில் பேசுவதற்கு கட்டணம் ஏதுமில்லை.
அரசு தயார்: வெள்ளத்தால் ஏற்படும் எந்த நிலையையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் களைய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









