திருவள்ளூரில் புதன்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடந்த 9-ம் தேதி, இந்து அமைப்பினர் சார்பில் திருவள்ளூரில் முக்கியப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
சிலை வைக்கப்பட்ட 3-ம் நாளான புதன்கிழமை திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், செவ்வாப்பேட்டை, புட்லூர், வேப்பம்பட்டு, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை உள்ளிட்ட இடங்களில் இருந்து திருவள்ளூர் ஆயில்மில் பகுதிக்கு பல்வேறு வடிவங்களிலான 30-க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு வரப்பட்டன.
பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜே.என். சாலை வழியாக ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தின் போது திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலை, திருவள்ளூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணியில்...
இதே போல், திருத்தணி நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 விநாயகர் சிலைகள் நந்தி ஆற்றில் புதன்கிழமை கரைக்கப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

