புதுப்பொலிவு பெறும் ராஜீவ்காந்தி நினைவகம்
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.


ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவகம் உள்ளது. இங்கு தற்போது பல கோடி ரூபாய் மதிப்பில் நினைவகத்தில் உள்ள 7 தூண்களுக்கு தங்க நிற பெயிண்ட் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ராஜீவ்காந்தி கடைசியாக பொதுக் கூட்டத்திற்கு நடந்து வந்த பாதையில் ஒரிசா காடுகளில் அரிதாகக் கிடைக்கக் கூடிய ஜாஸ்பர் ஹேம்பட்டைட் என்ற கல்லால் அமைக்கும் பணிகளும், நினைவகத்தில் உள்ள தேசியக் கொடியின் கீழே தாமரைக்குளம் சீரமைக்கும் நடைபெற்று வருகிறது.
நினைவகத்தைச் சுற்றிலும் பதிக்கப்பட்டிருந்த பழைய புல்தரை அகற்றப்பட்டு புதிய புல்தரை அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நினைவகத்திற்கு புதிய நுழைவு வாயில் அமைக்கும் பணியும், அதன் அருகே பார்வையாளர்களைச் சோதனை செய்யும் பகுதியும், பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த கார் நிறுத்துமிடம் வசதியும், பார்வையாளர்களுக்கு தனியாகக் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜீவ்காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம் கூறியது: ÷ஸ்ரீபெரும்புதூரில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நினைவகத்தில் உள்ள தூண்களில் பூசப்படும் பெயிண்ட் குறைந்த நாட்களிலேயே பொலிவிழந்து விடுகிறது இதனால் தாய்லாந்தில் பிரத்யோகமாகத் தாயாரிக்கப்பட்டு புத்தர் சிலைகள் மீது பூசப்படும் தங்க நிற பெயிண்ட் தற்போது தூண்களுக்குப் பூசப்படுகிறது.
மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக அவர்கள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைக்கத் தனியறையும், அவர்களுக்கு நவீன கழிப்பிட வசதியும், பார்வையாளர்கள் வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன நிறுத்துமிட வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நினைவகத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த புல்லின் ஆயுள்காலம் 6 ஆண்டுகள் தான். எனவே புல்தரை அமைத்து 6 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய புல்தரை அமைக்கும் பணிகளும், சென்னை அண்ணா பல்கலைகழக ஆய்வாளர்கள் உதவியும் தாமரைக்குளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...