வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்ததாக 2 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர். பின்னர் இவர்கள் ஆம்பூர் தாலுகா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தகவலின்பேரில் நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூர்தட்டு ஆகிய மலைக் கிராமங்களில் ஆம்பூர் வனச்சரக அலுவலர் கனகசபாபதி, வனவர் செந்தில் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது காமனூர் தட்டு பெரியகிணறு பகுதியில் கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஜமுனாமத்தூரைச் சேர்ந்த லட்சுமணன் (60) என்பவர் வாடகைக்கு குடிசை போட்டு அங்கு இரும்பு பட்டறை நடத்தி வந்ததும், அந்த பட்டறையில் நாட்டு துப்பாக்கிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, லட்சுமணனையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக நாயக்கனேரி மலைக் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமியையும் (45) பிடித்தனர்.
பின்னர் பட்டறையில் ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்க தேவையான இரும்பு பைப்புகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட தளவாட பொருள்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதன்பின்னர் இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களையும் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கி தயாரிக்கப்பட்ட இரும்பு பட்டறையை ஆம்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்



