ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி. நகர் குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓய்வு பெற்றோர் சங்கம் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை

News image
Updated On :7 ஆகஸ்ட் 2014, 9:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கேட்டுக் கொண்டுள்ளது.கூட்டம் தலைவர் எஸ்.ஹரிராமன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் பி.கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட சீரான குடிநீர் விநியோகம் செய்யவில்லை. புதியதாக ஆழ்துளைக் கிணறு அமைத்தும், ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுகளைத் தூர்வாரியும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாத்தும், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கியும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி, மதுரை ரோடு, ஜி.எம். நகரில், பட்டத்தரசியம்மன் கோயில் அருகேயுள்ள ஒரு தெருவிற்கு கடந்த 8 மாதங்களாக குடிநீர் ஒரு சொட்டு கூட வரவில்லை என்று நகராட்சி ஆணையாளர் மற்றும் குடிநீர் விநியோக மேற்பார்வையாளரிடம் பல முறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் தலையிட்டு பொதுமக்களின் நலன் காக்க வேண்டும்.

நகரின் பல இடங்களில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய்களை செப்பனிடுவதற்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சீர் செய்யப்படாமல் உள்ளது. இதில் பொதுமக்கள் குறிப்பாக மூத்தகுடிமக்கள் தடுமாறி விழும் துயர சம்பவங்கள் நிகழ்கிறது. தோண்டப்பட்ட சாலைகளை விரைவில் செப்பனிட்டோ அல்லது புதிய சாலைகள் அமைத்தோ நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓய்வூதியதாரருக்கு மருத்துவச் செலவு அதிகம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் மருத்தவப் படியை ரூ.100 லிருந்து ரூ.500 ஆக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பாஸ் வழங் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வட்டக் கிளை துணைத் தலைவர் இ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.