நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி திருக்கோயில் சார்பில் சுதந்திரதின அன்னதான பொதுவிருந்து

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 68-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அன்னதான பொதுவிருந்து நிகழ்ச்சி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு

News image
Updated On :15 ஆகஸ்ட் 2014, 9:25 am

என்.​ அங்​கு​பாபு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் வெள்ளிக்கிழமை அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் அன்னதான பொதுவிருந்து சிறப்பாக நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 68-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அன்னதான பொதுவிருந்து நிகழ்ச்சி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.  உதவி ஆணையர் மேனகா முன்னிலை வகித்தார். பழனி கோட்டாட்சியர் சுந்தர்ராஜ்,  பழனி ஒன்றியகுழு தலைவர் சேர்மன் செல்லசாமி, அதிமுக தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பாஜக மாநில நிர்வாகி வழக்கறிஞர் திருமலைசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவை முன்னிட்டு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி படத்துக்கும், அன்னத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  தவில், நாதஸ்வர கல்லூரி மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.  பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் அன்னதானம் வழங்கும் பணியை மேற்கொண்டனர்.

அன்னதானத்தை தொடர்ந்து ஆதரவற்ற முதியோர்க்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி, நகராட்சி கவுன்சிலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.