நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

  பழனி நேதாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி வள்ளிநாயகம்(29).  இவருக்கு திருமணமாகி பத்து வருடமான நிலையில்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2014, 12:35 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

     பழனி நேதாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி வள்ளிநாயகம்(29).  இவருக்கு திருமணமாகி பத்து வருடமான நிலையில் மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.  வள்ளிநாயகம் கடந்த சில வருடங்களாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  பல்வேறு இடங்களிலும் சிகிச்சை மேற்கொண்டு பலனில்லாத நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டின் மாடியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா எஸ்.கே.புத்தூர் நீலாம்பூரை சேர்ந்த வள்ளிநாயகத்தின் தாயார் கமலாத்தாள்(55) கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.