நரிக்குடி அருகே பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை தாக்கிய மாணவனுக்கு டி.சி கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் 2 மணிநேரம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பருத்தியூரைச் சேர்ந்த பிச்சை மகன் குமார்(17). வீரசோழன் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. இதேபோல், வியாழக்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றதாம். அப்போது, வகுப்பறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாணவர்களுடன் அமர்ந்திருந்தாராம். அப்போது, அப்பள்ளியின் பொருளாதார பாட பிரிவு ஆசிரியரான பிரான்சிஸ் சேவியர் மேற்பார்வையாளராக இருந்து தேர்வுக்கான வழிமுறைகள் விளக்கிக் கூறியுள்ளார்.
அப்போது மாணவர் குமார் ஆசிரியரை கேலி பேசியதைத் தொடர்நது வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர் குமார் ஆசிரியரை தாக்கினாராம். இதைபார்த்த மற்ற ஆசிரியர்கள் மாணவரை தாக்கி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளனர். மேல் அதிகாரி உத்தரவின் பேரில் தாற்காலிகமாக பள்ளியில் இருந்து மாணவரை நீக்கம் செய்து மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்கு சென்றனர். ஆனால், உடனே திரும்பி வெளியேறி வந்த மாணவர்கள், மாணவர் குமாரை தாக்கிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் 2 மணிநேரம் ஈடுபட்டனர்.
இதையடுத்து விரைந்து சென்ற நரிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர். அதைத் தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்கு திரும்பினர்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி வி.ஜெயக்குமார் கூறுகையில், மாணவர் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக தாற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மாணவருக்கு தனியறையில் வைத்து தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

