புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குமரியில் வெற்றிலை விலை இருமடங்கு உயர்வு

கன்னியாகுமரி பகுதியில் கடந்த 6 மாதங்களில் வெற்றிலையின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

News image
Updated On :19 பிப்ரவரி 2014, 10:30 pm

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி பகுதியில் கடந்த 6 மாதங்களில் வெற்றிலையின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். கடந்த 2013 செப்டம்பர் மாதம் ஒரு கட்டு வெற்றிலை ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 60-ஆக உயர்ந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மலேசியாவைப் பூர்விகமாகக் கொண்ட வெற்றிலை இந்தியா, இந்தோனேசியா நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளிலும், தேனி மாவட்டம் சின்னமனூர், கூடலூர் பகுதிகளிலும், திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதிகளிலும், மதுரை மாவட்டம் சோழவந்தானிலும் பணப் பயிராக வெற்றிலை பயிரிடப்படுகிறது.

இங்கு பயிராகும் வெற்றிலை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் தவிர வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலை உற்பத்தியாகும் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்து விட்டதால் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உற்பத்தி பாதிப்பு காரணமாக வெற்றிலை ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாக குமரி மாவட்ட வெற்றிலை வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

பல்வேறு மருத்துவக் குணங்கள் வாய்ந்த வெற்றிலை கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட மங்கள காரியங்களுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த கார்த்திகை மாதம் தொடங்கி கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் வெற்றிலையின் தேவை அதிகரித்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வெற்றிலையின் தேவை அதிகரித்துள்ளதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கட்டு வெற்றிலை படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாரம்பரிய நிகழ்வு: குமரி மாவட்டத்தில் கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை திருமணம், பூப்புனித நீராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வந்து செல்லும் விருந்தினர்களுக்கு சாப்பாடு முடிந்ததும் வெற்றிலை, பாக்கு வழங்கப்படுவது பாரம்பரியமாக நடைபெற்று வரும் முக்கிய நிகழ்வாகும்.

மருத்துவ குணங்கள்: வெற்றிலையின் மருத்துவத் தன்மை குறித்து மூலிகை மருத்துவரான கே.எழில் கூறியதாவது:

வெற்றிலைச் சாற்றுடன், துளசி இலையை சாறு சமஅளவு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளித்தொல்லை முற்றிலும் அகலும். வெற்றிலையை மெல்வதால் வாய் துர்நாற்றம் அகலும், உமிழ்நீர் பெருகும், நாடி, நரம்பு பலப்படும். வயிற்றுக் கோளாறு நீங்கி ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். மலச்சிக்கல் குணமாகும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

இது தவிர புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் வெற்றிலைக்கு உண்டு என்பதால் மக்களின் அன்றாட வாழ்வில் வெற்றிலை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.