சென்னை - புதுச்சேரி இடையில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள முதலியார்குப்பம் மழைத் துளி படகு குழாம் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கு நின்று செல்ல வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை அன்னை அளித்த ரம்மியமான அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கவும், மனமகிழ்வை அளித்திடவும், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதியில், இயற்கை எழில் அமைந்த பகுதியான முதலியார்குப்பத்தில் மழைத் துளிநீர் படகு குழாமை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைத்துள்ளது.
எங்கே உள்ளது? சென்னையில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், மேல்மருவத்தூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் இந்த படகு குழாம் அமைந்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கு தடையின்றி, வற்றாத ஜீவநதி செல்கின்ற பக்கிங்காம் கால்வாய் உள்ளதால், ஆண்டு முழுவதும் படகு சவாரி செயல்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கிற படகு குழாம் முகப்பிலிருந்து, கடற்கரை வரை 3 கி.மீ. தொலைவுக்கு பக்கிங்காம் கால்வாய் செல்கிறது.
தனிச்சிறப்பு: இந்தக் கால்வாயை ஒட்டி உள்ள கடற்கரையோரத்தில் பல்வகை மரங்கள் வளர்ந்தோங்கி, அடர்ந்த வனச்சோலையாகவும், குளிர்நிழலை தருகிற பூங்காவாகவும் காட்சி அளிக்கிறது.
மற்ற படகு இல்லங்களை காட்டிலும், இங்குள்ள முதலியார் குப்பம் மழைத்துளிநீர் படகு குழாமுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
இங்கு தண்ணீரை கிழித்துக் கொண்டு செல்கிற படகுகளில் நாம் பயணம் செய்யும்போது தண்ணீர் துளிகள் நம் மீது பட்டு, உடலை சிலிர்க்க வைக்கிறது. இதனால்தான் இந்த படகு இல்லம், "முதலியார்குப்பம் மழைத் துளிநீர் படகு குழாம்' என அழைக்கப்படுகிறது.
இதன் தொடக்கம்: கடந்த 13.05.2003-இல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் முதலியார்குப்பம் மழைத் துளி நீர் படகு குழாம் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 10 படகுகளை கொண்டு இயக்கப்பட்டு வந்த படகு இல்லத்துக்கு சுற்றுலா பயணிகளால், பெரிதும் வரவேற்பு கிடைத்தது.
படகுகளின் வகைகள்: இதனால் அவர்களது ஆவலை மேலும் பூர்த்தி செய்யும் வகையில், இலகுரக கயாக் படகுகள், வாட்டர் ஸ்கூட்டர், வாழைப்பழ வடிவிலான இழுவை படகுகள், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்கிற அதிவேக விசைப் படகு போன்ற படகுகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்திலேயே முதல்முறை... தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, முற்றிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மழைத் துளி படகு குழாமில் விசைப் படகில் இணைக்கப்பட்ட 200 அடி உயரம் வரை பறந்து செல்லக்கூடிய "பாரா செயிலிங்', நீர் சறுக்கு விளையாட்டுகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
பயிற்சியாளர் துணையுடன் வரும் நபர் நன்கு அனுபவம் வாய்ந்தவராக இருப்பின், இருவரும் "பாரா செயிலிங்' செல்லலாம். விசைப் படகு இணைக்கப்பட்ட நீர்சறுக்கு விளையாட்டை ஒருவர் மட்டுமே செய்ய முடியும்.
200 அடி உயர பலூனில் பறந்து செல்கிற நபர் கீழே பார்த்தால் கடற்கரையின் பேரலைகளையும், கிழக்கு கடற்கரையின் கண்கொள்ளா இயற்கை அழகையும் கண்டு மகிழ்வர்.
வெளிநாடுகளுக்கு நிகராக... அதுமட்டுமல்ல, "பம்பிங் ஜம்பிங்' சூடான காற்றின் உந்துதலால், உயரேச் செல்லும் பலூன், பட்டத்தின் துணைக் கொண்டு பறக்கும் விளையாட்டு மற்றும் நீரில் மூழ்கி கடல் வளத்தை கண்டு களிக்கிற வகையில் "ஸ்கூபா டைவிங்' போன்ற புதிய வகை சாகச நீர்விளையாட்டுகள் வெளிநாடுகளுக்கு நிகராக, அறிமுகப்பட்டுள்ளது. இங்கு இயக்கப்படுகிற படகுகளுக்கு, பயணிகள் பயன்படுத்தும் நேரத்தை பொருத்து, படகுகளின் வகைகளை பொருத்து, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2 பேர்கள் மட்டும் பயணம் செல்கிற வகையில் உள்ள அதிவேக சாகச நீர் விளையாட்டுப் படகுகளில் செல்ல அதிக ஆர்வத்துடன் வந்துச் செல்வதை பார்க்க முடிகிறது. இப்படகில் செல்லும்போது எதிர்பாராதவகையில் தவறி தண்ணிரில் விழுந்துவிட்டால், அடிபடாத வகையில் பாதுகாப்பு வசதி உள்ளது.
அதுமட்டுல்லாமல், படகு சவாரி செல்லும் முன்பு அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை கொடுக்கப்படுகிறது.
இதை அணிந்த பிறகே அவர்கள் படகில் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து, உணவு விடுதிகள் இயக்கப்படுமா? கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த படகு குழாமுக்கு சென்னையிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் செல்கிற அரசுப் பேருந்துகள் இங்கு நின்றுச் சென்றால் இன்னும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வர இயலும்.
அதே சமயம், கல்பாக்கம், கடப்பாக்கம், மரக்காணம் வரைச் செல்கிற அரசுப் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன.
போதிய உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் இல்லாதது பெரும் குறைப்பாடாக உள்ளது. இதன் விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள 91769 95827 என்ற அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
எனவே இவ்வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கு நின்று செல்லவும், உணவு விடுதிகளைத் திறக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


