நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் ஆடி அமாவாசை கூட்டம்

ஆடிமாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும்.  ஆடிஅமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பழனி சண்முகநதி உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.  பழனி

News image
Updated On :26 ஜூலை 2014, 2:31 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிமாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும்.  ஆடிஅமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பழனி சண்முகநதி உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.  பழனி மலைக்கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாப்பம்பட்டியை அடுத்த ஐவர்மலை அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  சுக்கமநாயக்கன்பட்டி அருள்மிகு செல்லியாண்டியம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை, பொன்னர்சங்கர் நாடகம் ஆகியன நடைபெற்றது.

கீரனூர் அருள்மிகு மதகடி கருப்பணசாமி, அருள்மிகு கண்டியம்மன் கோயில், கஞ்சநாயக்கன்பட்டி அருள்மிகு கரைக்கருப்பண்ணசாமி கோயில்களில் தீர்த்தம் எடுத்தல், அன்னதானம் ஆகியன சிறப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.