கரூர் அருகே லாலாப்பேட்டையில் மனைவியை அடித்துக்கொன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள வீரவள்ளியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(34). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அம்பிகா(31). இவர் கரூரில் உள்ள டெக்ஸில் வேலைப்பார்த்து வந்தார். இவர்களுக்கு மகன் கார்த்திகேயன்(12), மகள் சீலா(10) ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் நல்லதம்பி புதன்கிழமை காலை திருச்சியில் உள்ள அம்பிகாவின் பெற்றோரிடம் செல்போனில், உங்களது மகளும், நானும் பைக்கில் சென்றோம். அவள் கீழே விழுந்து, மூக்கில் ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்திலே இறந்துவிட்டாள். உடனே வீட்டுக்கு வாருங்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.
உடனே அம்பிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கழுத்தில் ரத்தம் வந்த நிலையில் அம்பிகா இறந்துகிடந்தார். நல்லதம்பியும் மாயமானார். அவரை போனில் தொடர்புகொண்டபோது சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ந்து போன அவர்கள், இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸிற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, அவரை நல்லதம்பி அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து நல்லதம்பியை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

