முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளிய "நோட்டா'

தமிழகத்தில் இடதுசாரிகள், புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளின் வாக்குகளை விட நோட்டாவுக்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 5.5 லட்சம் ஓட்டு: மக்களவைத் தேர்தலில் நோட்டா பொத்தான் நடைமுறைப்படுத்தப்பட்டதில் நீலகிரி தொகுதியில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு நோட்டவுக்கு 45,559 வாக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸýக்கு நான்காம் இடமே கிடைத்தது.

பாஜக நீலகிரி தொகுதியில் போட்டியிடவில்லை. அதிமுக மற்றும் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்ததன் காரணமாகவே நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நோட்டாவுக்கு 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழகத்தின் மொத்த வாக்குப்பதிவில் 1.4 சதவீதம் ஆகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் 18 தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

மேலும் புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை பெற்ற மொத்த வாக்குகள் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவாகும்.

புதுச்சேரி: நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் புதுச்சேரியில் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்கானது புதுச்சேரியில் பாமக பெற்ற வாக்கு சதவீதத்துக்கு இணையானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com