மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரத்தில் நடத்திய பொதுமக்கள் கருத்து கணிப்பில் தேர்வு செய்யப்பட்ட நல்லாசிரியர்கள்!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் ஆர்.கே.ஜி.பவுன்டேஷனும், வின்சாஃப்ட் கணினி பயிற்சி நிறுவனமும் இணைந்து ஆர்.விமல்ராஜ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நகரில் பொதுமக்களிடமும்,

News image
Updated On :3 செப்டம்பர் 2014, 12:56 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பில் 14 பேர் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் ஆர்.கே.ஜி.பவுன்டேஷனும், வின்சாஃப்ட் கணினி பயிற்சி நிறுவனமும் இணைந்து ஆர்.விமல்ராஜ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நகரில் பொதுமக்களிடமும், மாணவர்களிடம் படிவங்கள் மூலம் தங்களது சிறந்த ஆசிரியர்கள் யார் என கருத்து கணிப்பு நடத்தினர்.

இக்கருத்து கணிப்பில் 14 பேர் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டு 14 சிறந்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தினத்தன்று மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் கலைமாமணி விருது பெற்ற ஓய்வு பெற்ற கல்வி இயக்குநர் புதுவை சந்திரஹரி விருது வழங்கி கவுரவிக்கிறார் என ஆர்.கே.ஜி.பவுண்டேஷன் தலைவர் கே.நிர்மலா தெரிவித்துள்ளார்.

விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விபரம் வருமாறு: ஜி.செல்வம், டி.பாண்டிதுரை (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்), சி.கலைச்செல்வி (ஆறுமுகநாவலர் தொடக்கப்பள்ளி), ஜே.சுந்தரலிங்கம், எஸ்.இளங்கோவன், கே.செல்வக்குமார் (ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி), சி.பாஸ்கரன், இ.சசிகலாதேவி (ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி), வி.முத்துக்குமரன், ஜி.ஜெயந்தி (ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளி), ஜி.செந்தில்குமார் (அரசு மேல்நிலைப்பள்ளி வல்லத்துறை), வி.கல்யாணசுந்தரம் (ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தையூர் காஞ்சிபுரம் மாவட்டம்), எஸ்.தென்னவன் (ஊராட்சி பள்ளி, சிவபுரி). 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.