நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்

   பழனியை அடுத்த சண்முகநதியில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வந்தது.  இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் எழும் நிலையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை

News image
Updated On :12 செப்டம்பர் 2014, 1:43 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி சண்முகநதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

     பழனியை அடுத்த சண்முகநதியில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வந்தது.  இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் எழும் நிலையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஆகியன நடவடிக்கை எடுத்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து வந்தனர்.  கடந்த சில நாட்களாக விநாயகர்சிலைகள் கரைப்பதற்காக சண்முகநதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வந்தது.

தற்போது சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கண்காணிப்பு இல்லாத நிலை உள்ளது.  வெள்ளிக்கிழமை அதிகாலை சண்முகநதியில் பெரியாவுடையார் கோயில் அருகே டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக வருவாய்த்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்று பார்த்த போது ஐந்து டிராக்டர்களில் மணல் அள்ளப்படுவது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டவுடன் டிராக்டரில் இருந்த மண்ணை கொட்டிவிட்டு டிரைவர்கள் தப்பி ஓடினர். டிராக்டர்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தினர். இதுதொடர்பாக டிராக்டர் உரிமையாளர்கள் பிரபு, காளிதாஸ் உள்ளிட்ட ஐந்து பேருக்கு தலா ரூபாய் இருபத்து ஏழாயிரத்து ஐநூறு அபராதம் விதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.