/

பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து பதற்றம்

பண்ருட்டி அதிமுகவின இரு பிரிவினர் தனித்தனியாக காந்திரோடு, ராஜஜி சாலை, குமப்கோணம் சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை வழியாக சென்று சுப்ரமணியன் சுவாமி,கருணாநிதி எதிராக

News image
Updated On :27 செப்டம்பர் 2014, 10:18 am

சீனிவாசன்

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவித்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ருட்டி அதிமுகவின இரு பிரிவினர் தனித்தனியாக காந்திரோடு, ராஜஜி சாலை, குமப்கோணம் சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை வழியாக சென்று சுப்ரமணியன் சுவாமி,கருணாநிதி எதிராக கோஷங்களை முழங்கியும்,ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு கோஷங்களை எழுப்பி சென்றவர்கள் கடைகளை அடைக்கும்படி கூறிச்சென்றனர். சென்னை கும்பகோணம் நெடுஞ்சாலையில் கன்றக்கோட்டை புலவனூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராஜ் மற்றும் 75க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.