ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சசிபெருமாளை காந்தியவாதி என்று அழைப்பதற்கு எதிர்ப்பு

மது ஒழிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தி உயிரிழந்த சசிபெருமாளை காந்தியவாதி என்று அழைப்பதை உடனடியாக அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு

News image
Updated On :2 ஆகஸ்ட் 2015, 12:54 pm

கோ.ஜெயக்குமார்

மது ஒழிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தி உயிரிழந்த சசிபெருமாளை காந்தியவாதி என்று அழைப்பதை உடனடியாக அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் விருதுநகர் மாவட்ட அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான ஆ.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊடகங்களையும், நாளிதழ்களையும் இன்றைய இளைய சமுதாயத்தினரும், மாணவர்களும் மிகவும் நம்பி பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். ஏனென்றால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள ஊடகங்களைப் பார்க்கவும், செய்தித்தாள்களை வாசிக்கவும் ஊக்குவிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேசத்தந்தை மகாத்மா காந்தி அறவழியில் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.

சசிபெருமாள் குறித்து ஊடங்களிலும், செய்தித்தாள்களில் வந்த செய்தியைப் பார்க்கும், படிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் சசிபெருமாள் செய்த செயல்தான் காந்தியவாதம், அறவழி என்ற தவறான முன்னுதாரணத்தைப் பின்பற்ற ஏதுவாகியுள்ளது. செல்போன் கோபுரத்தின் மீது ஏறி மண்ணெண்னையுடன் தற்கொலை மிரட்டல் விடுவதுதான் காந்தியவாதம் என்று மாணவர்கள் நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இது அவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனை ஊடங்களும், பத்திரிக்கைகளும் நாட்டு நலன் கருதி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இச் செயல் காந்தியவாதம் இல்லை என்று விளக்க வேண்டும். காந்தியம் என்ற சுத்தமான வார்த்தையை தேவையற்று பயன்படுத்தி அரசியல் கட்சிகள் இளைஞர்களையும் மாணவர்களையும் தீயவழியில் இழுத்துச் செல்ல வேண்டாம்.

மதுவுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்கிறார்கள். இது அவசியம் தான். போராட்டங்கள் தேவை தான். அதற்காக வன்முறையான காரியத்தை காந்தியவாதம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது இல்லை எனறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.