போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நிறுவனங்களின் பொறுப்பு: எஸ்.பி. ரச்சனா சிங்

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நிறுவனங்களின் பொறுப்பாகும் என புதுச்சேரி எஸ்.பி. ரச்சனா சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2015, 4:51 pm

சுஜித்குமார்

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நிறுவனங்களின் பொறுப்பாகும் என புதுச்சேரி எஸ்.பி. ரச்சனா சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) புதுச்சேரி, இந்தியன் உமன் நெட்வார்க் சார்பில் பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் ஓட்டல் அதீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் எஸ்.பி. ரச்சனா சிங் பேசியதாவது:

சமுதாயத்தில் பெண்களுக்கு சமஉரிமை, சமத்துவம் கிடைக்க வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.

பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்பட்டால் அதைத்தடுக்க வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு அதிகம் உள்ளது.

வேலை செய்வதற்கான சூழ்நிலைகள் குறித்து பெண்களுக்கு விளக்க வேண்டும். மேலும் நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்தி, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களை விசாரிக்கவேண்டும். 90 நாள்களுக்குள் அதன் மீது விசாரணை செய்து காவல்துறையில் புகார் செய்ய வேண்டும். போலீஸார் அதைப் பெற்று 1 வாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் பெண்களுக்கும் சுய பொறுப்பு உள்ளது. பணிபுரியும் இடத்தில் எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். ஏதாவது நேர்ந்தால் உடனே புகார் செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டினரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆண்கள் தொந்தரவு செய்ய வரும் போது அவர்களை எளிதாக சமாளிக்கலாம். தற்காப்புக் கலை மட்டுமல்ல, ஊசி, பின் போன்றவற்றைக் கொண்டு குத்துவது, மிளகு ஸ்பேரே அடித்தல், ஆண்களை தாக்குதல் போன்றவற்றின் மூலம் பெண்கள் தற்காத்துக் கொள்ளலாம் என்றார் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.