போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுதந்திர தின விழா: துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்களுக்கு முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 9:17 am

சுஜித்குமார்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்களுக்கு முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துணைநிலை ஆளுநர் ஏகே.சிங்: புதுச்சேரி மக்களுக்கு என்னுடைய சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம், மதிப்பு, கனவுகளை நினைவு கூர வேண்டிய தருணமாகும். புதுவை அரசு மூலம் அனைத்து தர மக்களுக்கும் நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கச் செய்ய வேண்டும். புதுவை மேம்பாட்டுக்காக திறன் மேம்பாடு, கட்டமைப்பு வசதி, முதலீட்டுக்கான வாய்ப்பு போன்றவற்றை அரசு செய்து வருகிறது. புதுவை மக்கள் ஒத்துழைப்புடன் நகரை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மக்களுக்கான பணிகளை புதுவை அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முதல்வர் என்.ரங்கசாமி: அன்னிய சக்திகளிடம் இருந்து விடுதலை பெற்று 69 ஆண்டுகள் ஆகின்றன. பரந்து விரிந்த பாரத தேசத்தை ஒருங்கிணைத்து நாட்டு மக்களிடையே விடுதலை வேட்கையை ஊட்டி சுதந்திரம் வேண்டிய இன்னுயிரை ஈந்தவர்கள் தியாகத்தை நினைவு கூர வேண்டும். அவர்களுக்கு வீரவணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா உள்ளதைப்போல், சிறிய மாநிலமான புதுவையும், பல்வேறு நிலைகளில் நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.

குறிóப்பாக கல்வி, சுகாதாரத் திட்டங்களை கூறலாம். முதியோர், பெண்கள், விதவைகள், ஆதிதிராவிடர், மீனவர்களுக்கு திட்டங்களை கண்டறிந்து அரசு செயல்படுத்தி வருகிறது. சரியான திட்டங்களைத் தீட்டி அவற்றை மக்களுக்கு கொண்டு செல்ல ஒத்துழைப்பையும், ஆதரவையும் தர வேண்டும் என்றார்.

நலத்துறை அமைச்சர் பெ.ராஜவேலு: ஆங்கிலேயரின் பிடியில் இருந்த நமது இந்தியத் திருநாட்டை தன்னலமற்ற தேசத் தலைவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தும், செங்குருதி சிந்தியும் அடிமை விலங்கினை தகர்த்தெறிந்து இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்த திருநாளான ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாளை சுதந்திர தினமாக ஆண்டுதோறும் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் நாம் கொண்டாடி வருகிறோம். இந்நாளில் நாட்டின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களை நினைவு கூர்வது நமது கடமையாகும்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி: இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான தியாகச்செம்மல்கள், சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் தங்களுடைய உயிரையும் துச்சமென எண்ணி வெள்ளையனே வெளியேறு இந்திய நாடு இந்தியனுக்கே என்று கூக்குரல் தந்து உண்ணாவிரதம், ஒத்துழையாமை இயக்கம் என அண்ணல் காந்தியடிகளின் தலைமையில் போராட்டம் நடத்தி பல லட்சம் இந்தியர்கள் வெள்ளைக்கார ஆதிக்கத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாக்கி சுதந்திரத்தை பெற்றோம்.

சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த நேரத்தில், புதுவை மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் அரசும், மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசும் புதுவை மாநிலத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது.

சுதந்திர தின நாளில் புதுவை மாநிலத்தில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஆதிதிராவிடர்கள், மற்றும் மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மகளிர், மாணவர்கள், அரசு ஊழியர்கள், மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் என் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம்:  எண்ணற்ற தலைவர்களின் உழைப்பாலும், உயிர் தியாகத்தாலும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மகாத்மா காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ்காந்தி ஆகியோரால் நாடு வேகமான முன்னேற்றத்தைக் கண்டது. ஆனால் தற்போது மதச்சார்பு என்ற கொள்கையை புகுத்தி நாட்டை பிளவுபடுத்தி வருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கனவை நனவாக்க சுதந்திர திருநாளில் நாம் ஒன்று சேர்ந்து உறுதி எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மக்களவை தொகுதி எம்.பி. ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி:

நம் இந்திய திருநாடு 69 வது சுதந்திரத்திருநாளைக் கொண்டாடி வருகிறது. இந்த நாள் நம் தேசியத் திருநாள். நம் நாட்டு விடுதலைக்கு செங்குருதி சிந்திய தியாக மறவர்களை நாம் இத்திருநாளில் நினைவு கூர்வோம்.  தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத்தந்த விடுதலை வீரர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட தலைவர்களின் கனவை நினைவாக்க இத்திருநாளில் சபதம் ஏற்போம்.

பா.ஜ.க. பொதுச் செயலர் ஆர்வி.சாமிநாதன்:

பாரக தேசம் அன்னியரின் பிடியில் இருந்து விடுபட்டு 69 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்துக்காக இன்னுயிரை ஈந்தவர்கள் தியாகத்தை இளையதலைமுறையினர் அறிந்துன் கொள்ள வேண்டும். சாதி, மதம், மொழி வேற்றுமை பாராமல் ஒன்றிணைந்து நாட்டை வல்லரசாக்க, பிரதமர் மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி அன்னிய பொருள்கள் பயன்பாட்டை குறைத்து தேவையான பொருள்களை நாமே தயாரிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் பாரதம் வளர்ச்சியடைந்து வல்லரசாக்க சபதம் ஏற்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.