/

தூத்துக்குடி அனல் மின் நிலைய 1 ஆவது அலகில் மின் உற்பத்தி தொடக்கம்

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலைய 1 ஆவது அலகில் சனிக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2015, 11:01 am

இன்பராஜ்

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலைய 1 ஆவது அலகில் சனிக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் (யூனிட்) உள்ளன. இதன் மூலம் மூலம் தினமும் ஏறத்தாழ 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மாத்ம 28 ஆம் தேதி 1 ஆவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

 தொடர்ந்து 20 நாள்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தொரிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே பணிகள் முடிக்கப்பட்டு சனிக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதனால், சனிக்கிழமை இரவு நிலவரப்படி ஏறத்தாழ 1000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.