திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பெண்கள் கைது
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் 4 கிலோ தங்க நகைகளை வான்நுண்ணறிவு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் 4 கிலோ தங்க நகைகளை வான்நுண்ணறிவு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்றிரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இந்திராணி (53), லூர்து மேரி (73) ஆகிய இருவரும் உள்ளாடைக்குள் 4 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை வான்நுண்ணறிவு துறையினர் பறிமுதல் செய்தனர். 4 கிலோ தங்க நகைகளின் மதிப்பு 176 லட்சமாகும்.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...