விருதுநகரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சார்பில் மாலையில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை தலைமைக் கழகம் அமைத்துள்ளது. இக்குழுவினர் மாவட்டந்தோறும் நேரில் சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் தயாரிப்பு அறிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் அரங்கத்தில் பல்வேறு தொழில் வர்த்தக அமைப்புகளுடனான கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தேர்தல் தயாரிப்பு குழுவைச் சேர்ந்த துணைப் பொதுச்செயலாளர் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, பேராசிரியர் அ.ராமசாமி, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் மற்றும் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம்தென்னரசு ஆகியோர் பங்கேற்று பல்வேறு சங்க நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


