இளம் பெண்ணைக் கடத்திச் சென்றவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை
ராஜபாளையம் அருகே இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.


ராஜபாளையம் அருகே திருமண வயது அடையாத பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
ராஜபாளையம், தளவாய்புரம்-செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைப்பாண்டி-சாந்தி தம்பதியினரின் மகளும் தளவாய்புரம்-முத்துச்சாமிபுரம் கண்ணன் மகன் முத்துராஜ் (26) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள்.
முத்துராஜ், பிச்சைப்பாண்டி மகளை, அவர் திருமண வயதை எட்டாவதவர் என்று தெரிந்தும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 21.1.2012-ம் தேதி திருச்செந்தூருக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்ட பின்னர் மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்துள்ளார்.
இது குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முத்துரைஜைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, திருமண வயதை அடையாத பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக (இ.த.ச.366-ஏ) முத்துராஜூக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபரதாதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்புக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...