பெண்ணை இழிவுப்படுத்தி மிரட்டல் விடுத்ததாக இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை இழிவுப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை இழிவுப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி பாக்கியலட்சுமி (30). இவர் வன்னியம்பட்டி விலக்கு-ஆலங்குளம் சாலையில் உள்ள திக் விஜய் பாலி டெக் என்ற தனியார் நிறுவனத்தில் தையல் வேலை செய்து வந்தார். இதே இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், கூனங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணின் மகன் ராஜசேகர் (40) என்பவர் வேலை செய்து வருகிறார்.
திங்கள்கிழமை பாக்கியலட்சுமி வேலை செய்து கொண்டிருந்தபோது, ராஜசேகர் தவறான நோக்கத்துடன் வந்து, பாக்கியலட்சுமியின் முதுகை தட்டியுள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது, ஆசைக்கு இனங்கினால்தான் இங்கு வேலை செய்ய முடியும் என்று கூறினாராம். மேலும் பாக்கியலட்சுமியின் கையைப் பிடித்து இழுத்து ராஜசேகர் ஆபாசமாகப் பேசினாராம். அப்போது அங்கு வந்த உடன் வேலை செய்யும் ராஜபாளையம், பழையபாளையம், முத்தையராஜா தெருவைச் சேர்ந்த கே.கே.பத்மனாபராஜா மகன் ராமசுப்பிரமணியண் (52) என்பவர் பாக்கியலட்சுமியை கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினாராம்.
ராஜசேகர் தன் ஆசைக்கு இனங்காத இங்கு வேலை செய்த ராமுத்தாய், ராமலட்சுமி உள்ளிட்ட பெண்களை ஏதாவது காரணம் சொல்லி வேலையிலிருந்து நிறுத்திவிட்டாராம்.வெளியே இருந்த பாக்கியலட்சுமி, அவ்வழியே வந்த இவரது ஊரைச் சேர்ந்த ஹரிராமன், கனகராஜ் ஆகியோருடன் சம்பவம் குறித்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ராஜசேகர், பாக்கியலட்சுமியை இன்னும் இங்கிருந்து போகவில்லையா? என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகர், ராமசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...