போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விஜயகாந்த்தை பாதுகாப்புடன் அனுப்பி வைத்த புதுச்சேரி போலீஸார்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு பலத்த பாதுகாப்புடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை போலீஸார் அனுப்பி வைத்தனர்.

News image
Updated On :29 டிசம்பர் 2015, 9:53 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு பலத்த பாதுகாப்புடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை போலீஸார் அனுப்பி வைத்தனர்.

கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இருந்த விஜயகாந்த், திங்கள்கிழமை இரவு புதுச்சேரியில் உள்ள ஓட்டல் அண்ணாமலையில் தங்கினார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே ஓட்டல் முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் கூடி போராட்டங்களை நடத்தினர். அதே போல் செய்தியாளர்களும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஓட்டலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திப்பதற்காக செய்தியாளர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால் அவர் எதுவும் பேசாமல் செல்ல முயன்றபோது, சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது புதுச்சேரி போலீஸார் அவரை பாதுகாப்புடன் காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.