/

பழனியில் திரிந்த 118 பன்றிகள் பிடிப்பு

தமிழகத்தின் முக்கிய கோயில் நகரான பழனியில் சுகாதாரக்கேட்டை பரப்பும் விதமாக பன்றிகள் சுற்றித் திரிந்து வந்தன. இவற்றால் பன்றிக்காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் பரவ சூழல் ஏற்படுவதாக பழனி

News image
Updated On :24 பிப்ரவரி 2015, 11:28 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் நகரில் சுற்றித்திரிந்த 118 பன்றிகள் பிடிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று உயிருடன் விடப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய கோயில் நகரான பழனியில் சுகாதாரக்கேட்டை பரப்பும் விதமாக பன்றிகள் சுற்றித் திரிந்து வந்தன. இவற்றால் பன்றிக்காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் பரவ சூழல் ஏற்படுவதாக பழனி நகராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் வந்த புகாரின் அடிப்படையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பன்றி வளர்ப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  பின் தொடர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நகரிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித்திரிந்த பன்றிகள் நகராட்சி ஆணையர் உத்திரவின் பேரில் பிடித்து வேனில் அடைக்கப்பட்டது.  இதற்காக மதுரையை சேர்ந்த தன்னார்வ அமைப்பின் குழு ஒன்று வந்திருந்தது.  இவர்கள் பன்றிகளை குச்சிகளைக் கொண்டு லாவகமாக பிடித்து கயிற்றால் கட்டி வேனில் ஏற்றினர்.  பன்றிகள் வேனில் இருந்து குதிக்காவண்ணம் வேன் வலைகளால் மூடப்பட்டிருந்தது.  காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று வரை மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் மொத்தம் 118 பன்றிகள் பிடிக்கப்பட்டது. 

இவை பழனியில் இருந்து பல கி.மீ தூரம் கொண்டு செல்லப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உயிருடன் விடப்பட்டது. பன்றிகள் பிடிக்கும் பணி புதன்கிழமையும் தொடருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.