15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவர் காவல் நிலையத்துக்கு பணிக்கு முறையாக வராமலும், குடிபோதை யில் காவல்துறையின்

Updated On :25 பிப்ரவரி 2015, 11:22 am

திருவாரூரில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட தலைமைக் காவ லர் ஒருவர் தாற்காலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவர் காவல் நிலையத்துக்கு பணிக்கு முறையாக வராமலும், குடிபோதை யில் காவல்துறையின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவ்வபோது சீருடை அணிந்து கொண்டு தன்னிச்சையாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு பணம் வசூலித்து வந்துள்ளார்.

தவிர மதுபானக் கடை மற்றும் பார்களில் மிரட்டி பணம் வசூலித்துள்ளார். கடைகள் மற்றும் இதர வியாபாரிகளிடம் காவல் உயர்அலுவலர் எனக்கூறி மிரட்டி பணம் வாங்குவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்.18-ம் தேதி குடவாசல் காப்பனமங்கலம் கஜேந்திரன் என்பவரின் மீன்கடைக்குச் சென்று குடவாசல் காவலர் என அறிமுகம் செய்து கொண்டு அவரிடம் பண ம் கேட்டு மிரட்டியுள்ளார். முருகானந்ததின் மீதான புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாள ர் த. ஜெயச்சந்திரனின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து எஸ்.பி. ஜெயச்சந்திரன், தலைமைக் காவலர் முருகானந்தத்தை செவ்வாய்க் கிழமை தாற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.