கலசலிங்கம் பல்கலை.யின் பி.எட். சிறப்பு பிரிவிற்கு மத்திய அரசு பாராட்டு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய்பேசி இயலாத மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கு கற்றுத் தருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பி.எட். பட்டப்


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய்பேசி இயலாத மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கு கற்றுத் தருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பி.எட். பட்டப் படிப்பிற்கு மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ச.சரவணசங்கர் (படம்) திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து மாணவர்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள். இந்த பட்டப் படித்து முடித்துவிட்டு, பி.எட். படித்து ஆசிரியர் பணிக்குச் செல்வதில் அதிக ஆர்வம் காணமுடிகிறது. கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள பி.எட் படிப்பு ஒரு சிறப்புப் பிரிவு. இங்கு பி.எட். படித்தவர்கள் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாணவர்களுக்கும் கற்றுத்தரலாம். அதோடு ஏனைய பி.எட். முடித்தவர்கள்போல சாதாரண பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியலாம். இதனால் இந்த சிறப்புப் பிரிவில் படிப்பவர்களுக்கு நாட்டில் எங்கு சென்றாலும் பள்ளிகளில் வேலைவாய்ப்புகள் அதிகம். இதுவரை இங்கு பி.எட். முடித்துச் சென்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக ஊதியத்தில் பணிக்குச் சென்று கொண்டுள்ளார்கள்.
புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு கவுன்சிலின் கீழ், இந்தியாவில் 447 பி.எட். மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன.
இதில் தமிழ்நாட்டில் செயல்படும் 40-ல் கலசலிங்கம் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுச் சான்றிதழ் கடந்த வாரம் வழங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 7 மாணவ மாணவியர், இங்கு வளாக நேர்காணல் மூலம் வேலைக்குச் சென்றுள்ளார்கள்.
இந்த பி.எட். சிறப்புப் பிரிவு இரு ஆண்டுகளுக்கான பாட திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் 2-ம் ஆண்டில் சென்னையில் உள்ள சிறப்புப் பள்ளிக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார் துணை வேந்தர் ச.சரவணசங்கர். அப்போது உடன் துறைத் தலைவர் டாக்டர் வெங்கடேசலு உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...