எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் இடதுசாரிகள் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2015, 8:44 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் இடதுசாரிகள் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டு, முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும். மத்தியப் பிரதேசத்தில் வியாபம் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் கிடப்பில் உள்ள மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தவேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அ.வின்சென்ட், காரைக்கால் வட்ட செயலர் என்.எம்.கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அமைப்புக் குழுத் தலைவர் தமிழழகன், பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் முகம்மது பிலால் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.