சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2015, 2:35 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் புதன்கிழமை காலை நிலவரப்படி
பாபநாசம் அணையில் 18 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 11, சேர்வலாறு அணையில் 7 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 1.6 மி.மீ, ராமநதி அணையில் 5 மி.மீ, குண்டாறு அணையில் 13.1 மி.மீ, அடவிநயினார் அணையில் 13 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டில் 5 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ, சங்கரன்கோவிலில் 2 மி.மீ, தென்காசியில் 6.4 மி.மீ, ஆய்க்குடியில் 8.2 மி.மீ, செங்கோட்டையில் 6.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.

தாமிரவருணி பாசனத்தில் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்யவில்லை. எனினும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

833 கனஅடி நீர்வரத்து இருந்து பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,895.83 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,600 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 30 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 128.38 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 55.51 கனஅடியும் அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 43 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு 1054.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 375 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 89.17 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77.85 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 56.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 63 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 82 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 49 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.