ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாய நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.14.67 லட்சம் மோசடி: பணியாளர்கள் மூவர் கைது

தமிழக அரசின் விவசாய நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1997-2010 ஆண்டுகளில், அரசிடம் இருந்து பெற்ப்பட்ட தள்ளுபடி தொகையை போலியான பற்றுச் சீட்டுகள் போட்டு ரூ.14,67,284 மோசடி செய்த கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மூவரை வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :26 ஜூலை 2015, 12:10 pm

கோ.ஜெயக்குமார்

தமிழக அரசின் விவசாய நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1997-2010 ஆண்டுகளில், அரசிடம் இருந்து பெற்ப்பட்ட தள்ளுபடி தொகையை போலியான பற்றுச் சீட்டுகள் போட்டு ரூ.14,67,284 மோசடி செய்த கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மூவரை வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சங்கத்தின் எழுத்தரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, கொல்லப்பட்டியில் எஸ்.பி.எஸ்.பி.எல்.69  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சாத்தூர், குருலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (54) சங்க செயலாளராக வேலை செய்து வந்தார். சடையம்பட்டியைச் சேர்ந்த சங்கரேஸேவரன், அம்மாபட்டியைச் சேர்ந்த அண்ணாத்துரை (50) ஆகியோர் எழுத்தராக வேலை செய்து வந்தனர். அய்யம்பட்டியைச் சேர்ந்த கணபதி (59) என்பவர் எடையாளராக வேலை செய்து வந்தார்.

இவர்கள் நால்வரும் சேர்ந்து, 1997 முதல் 2010 ஆண்டுகளில் சங்கத்திற்கு தமிழக அரசின் விவசாய நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் அரசிடமிருந்து பெறப்பட்ட தள்ளுபடி தொகையை கடன்தாரர்களுக்கு திரும்ப வழங்காமல், போலியான பற்றுச் சீட்டுகள் மூலம், கடன்தாரர்களுக்கு கடன் வழங்கியதாக பொய்யான கணக்கு எழுதி சங்கத்தில் ரூ.14,67,284 மோசடி செய்து நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்தச் சங்கத்தின் முறைகேடுகள் குறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் திலிப்குமார், திருநெல்வேலியில் உள்ள வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் கலிமுல்லாஷாவிடம் புகார் அளித்தார். இதன் பேரில் விருதுநகர் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், சார்பு ஆய்வாளர்கள் விஜயா, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராமராஜ், கொண்டப்பன் ஆகியோர் கொண்ட போலீஸ் படை, வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயச்சந்திரன், அண்ணாத்துரை, கணபதி ஆகியோரைக் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள எழுத்தர் சங்கரேஸ்வரனைத் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட மூவரும் விருதுநகர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.