டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கலசலிங்கம் பல்கலை.க்கு ராஜஸ்தான் ராயல் அணி கிரிக்கெட் வீரர் வருகை

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 32 அணியில் முதலாண்டு பி.டெக். படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்ற

News image
Updated On :9 ஜூன் 2015, 1:02 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 32 அணியில் முதலாண்டு பி.டெக். படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்ற ராஜஸ்தான் ராயல் அணியின் கிரிக்கெட் வாீரர் சஞ்ஜூ சாம்சன் செவ்வாய்கிழமை வருகை புரிந்தார்.அவரை துணை வேந்தர் டாக்டர் ச.சரவணசங்கர் மற்றும் வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

அப்போது முரளிகிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது: கலசலிங்கம் பல்கலைக்கழகம் கல்விக்கு மட்டுமல்லாது, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு கலைகளுக்கும் சம அந்தஸ்து அளித்து பயிற்சி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியுடன் பாட்னராக விளையாடி, மாணவர்கள் விளையாட்டை ரசிக்கவும், பேராசிரியர்கள் இதனை நேரடியாக சென்று பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்.

ராஜஸ்தான் ராயல் அணியின் தலைமை மேலாளர் சுராப் அரோரா பேசுகையில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பாராட்டினார்.

பின்னர் அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்ஜூ சாம்சன் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்கள் தொழிற் கல்வி படித்தாலும், விளையாட்டில் ஆர்வம் இருந்தால் இந்திய கிரிக்கெட் வீரராக முடியும். வருங்கால கல்வி வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கும்.

நான் 20 ஆண்டுகள் பல கடினமான அனுபவங்களைப் பெற்றுதான் இன்று விளையாட்டில் முழு நேரமாக நுழைய முடிந்தது. தன்னை ராஜஸ்தான் ராயல் அணிக்கு விளையாட கேப்டன் ராகுல் டிராவிட் அழைப்பு விடுத்த அந்த மணித் துளிகள்தான் வாழ்க்கையில் மிகுந்த மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது என்றார் அவர்.

மாணவர்களுடன் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிங் செய்தார் அவர், பின்னர் பல்கலைக்கழகத்தின் மத்திய நூலகம், சர்வதேச ஆராய்ச்சி மையம், நீச்சல் குளம் ஆகியவற்றைப் பார்வையிட்டு பாராட்டினார். ராஜஸ்தான் ராயல் அணியின் துணை மேலாளர் விஷாகா தியாகி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.