விருதுநகர் அருகே பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதாக கூறி தடையுத்தரவு பெற தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கிராம மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆட்சேபனை தெரிவித்தனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வச்சக்காரப்பட்டி கிராமம். இக்கிராம ஊராட்சியில் உள்ள தடங்கம், சண்முகசுந்தரபுரம், பூசாரிபட்டி, வச்சக்காரப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு ஆகிய பகுதிகளில் ரூ.46.50 லட்சத்தில் 4 சமுதாயக் கூடம் அமைத்தல், ரூ.15 லட்சத்தில் குடிநீர் குழாய் பதித்தல், தலா ரூ.9 லட்சத்தில் 4 சிமெண்ட் சாலை அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் கிராம தன்னிறைவு திட்டம் மூலம் ரூ.1.42 கோடியில் நடந்து வருகிறது. தற்போது, 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
இந்நிலையில், இதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்விநாயகம் என்பவர் பொதுமக்களுக்கு இடையூராக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி தடையுத்தரவு பெறுவதற்காக பொதுமக்கள் சார்பாக சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாராம். இந்த மனு மீதான விசாரணை விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக ஊராட்சி தலைவர் ஆனந்தராமன் தலைமையில் 200-பேர் நீதிமன்றத்திற்கு வந்தனர். பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.