பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: எதிர்கட்சி உறுப்பினர்கள் தர்னா, வெளிநடப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் மக்களுக்கான புதிய திட்டங்கள் இல்லை என ஆட்சேபம் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அல்வா கொடுத்தும்,

News image
Updated On :31 மார்ச் 2015, 2:43 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாநகராட்சிக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் மக்களுக்கான புதிய திட்டங்கள் இல்லை என ஆட்சேபம் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அல்வா கொடுத்தும், தர்னாவில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் இ. புவனேஷ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் அர. லட்சுமி, மாநகர பொறியாளர் எம்.கே. ஜெயசேவியர், செயற்பொறியாளர் நாராயண்நாயர், உதவி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்ட அரங்கிற்கு உறுப்பினர்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்ததால், கூட்டத்தை தொடங்காமல் 15 நிமிடங்கள் மேயர் காத்திருந்தார். துணை மேயர் பூ. ஜெகநாதன், மண்டலக்குழுத் தலைவர்கள் எம்.சி. ராஜன், எஸ்.கே. ஹைதர்அலி, ந. மோகன், கி. மாதவராமானுஜம் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் வந்ததும் கூட்டம் தொடங்கியது.

அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களை தொடர்ந்து 2015-16 ஆம் ஆண்டு்க்கான பட்ஜெட்டை மேயர் வாசித்தார். மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இ்ல்லை என தெரிவித்த திமுக, மதிமுக, பாஜக, சுயேட்சை உறுப்பினர்கள் மேயர் இருக்கை முன்பு சென்று கோஷம் எழுப்பினர். கூட்ட நிகழ்ச்சி நிரலை கிழித்தனர். பின்னர் திருநெல்வேலியை மேம்படுத்த திட்டங்கள் எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் மேயர், அதிகாரிகள், உறுப்பினர்களுக்கு அல்வா கொடுத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

வெளிநடப்பு:

திமுக, மதிமுக, பாஜக உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முகம்மதுகமாலுதீன், பாலன் என்ற ராஜா, தனலெட்சுமி, ஜெரினாபீவி, வசந்தி, பாஸ்கர், கொப்பரை சுப்பிரமணியன், சுகந்திஷைலா, ஜோசப், சரோஜினி, டேனியல் ஆபரகாம் உள்ளிட்ட 15 பேர் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநகராட்சியை மேம்படுத்த திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் இல்லை. ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட தீர்மானங்கள் கொண்டு வரவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

உறுப்பினர் தர்னா: மாநகராட்சி 48 ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.என். சரவணன், மாநகராட்சி மக்களுக்கான குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.தனது வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறது. 48 ஆவது வார்டில் 13 வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து பின்னர் ரத்து செய்யப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.அதிமுக உறுப்பினர்கள் சமாதானம் செய்தனர். தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சரவணனிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டார்.

பட்ஜெட் வாசித்து முடிந்ததும் துணை மேயர் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். இதனிடையே தனது வார்டுக்கு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றாததை கண்டித்து 9 ஆவது வார்டு உறுப்பினர் பே. கணேசன் (அதிமுக) வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து வெளியேறினார்.

காங்கிரஸ் ஆட்சேபம்: மாநகராட்சியில் தெருவிளக்குகளை மின்சிக்கன முறையில் பராமரிக்கவும், மின் ஆற்றலை தணிக்கை செய்யவும், புதிதாக தெருவிளக்கு பொருத்தி இயக்கி பராமரிக்கும் பணிகளை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பராமரிக்க சென்னை ஆகாஷ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கும் தீர்மானத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் டி.என். உமாபதிசிவன், இத்திட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து தர்னாவில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.