விருதுநகரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.


விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களிடம் நலத்திட்டங்கள் பெறுவது தொடர்பான பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சித் தலைவர் அலுவலர்களிடையே பேசுகையில் கூறியதாவது:
அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்களும், தங்களுக்குரிய அனைத்துக் கோப்புகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சரின் தனிப் பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனே துரித நடவடிக்கை எடுத்து, நிலுவை மனுக்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
நலத்திட்ட உதவிகள் கேட்டு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கு உலக சிக்கனநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி அவர்களைப் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...