அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இரு மோட்டார் வாகன விபத்து வழக்குகள்: ரூ.25.68 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

இரு மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டு காயமுற்ற இருவருக்கு ரூ.25,68,600 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2015, 2:12 pm

கோ.ஜெயக்குமார்

இரு மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டு காயமுற்ற இருவருக்கு ரூ.25,68,600 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணன்கோவில், கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் காயத்ரி (9). இவர் கிருஷ்ணன்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். 29.2.12-ம் தேதி பள்ளி முடிந்து கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, காயத்ரி மீது பின்னால் வந்த ஜூப் மோதியது. இதில் காயத்ரியின் கால் எலும்பு முறிந்தது. இதனையடுத்து காயத்ரி சார்பில் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், புதுக்கோட்டை நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், காயத்ரிக்கு ரூ.8,62,300 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு: ராஜபாளையம், சீதகாதி தெருவைச் சேர்ந்தவர் ஹஜூஸ் முகமது (47). இவர் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை வைத்துள்ளார். 16.8.11-ம் தேதி ஆம்னி பேருந்தில் சென்னையிலிருந்து ராஜபாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் ஆம்னி பேருந்தும் மோதிக்கொண்டன. இந்தத விபத்தில் ஹஜூஸ் முகமதுவிற்கு முதுகெலும்பு முறிந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

இதனையடுத்து தனக்கு இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், கோயமுத்தூர், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், ஹஜூஸ் முகமதுவிற்கு ரூ.17,06,300 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.