அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முதல்வர் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையினருக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று, தமிழ்நாடு சிறுபான்மையின நல ஆணையத் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் கூறினார்.

News image
Updated On :4 நவம்பர் 2015, 2:21 pm

கோ.ஜெயக்குமார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையினருக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று, தமிழ்நாடு சிறுபான்மையின நல ஆணையத் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் கூறினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையினருக்கென செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் முன்னிலையில், தமிழ்நாடு சிறுபான்மையின நல ஆணையத் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணையத் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் பேசுகையில் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையின மக்களின் சமூகம், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு செய்திடும் வகையில் சீரிய நோக்கில் சிறுபான்மையின சமுதாய மக்கள் பயன்பெறும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம், பெத்லகேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ சமுத்திரம் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்றுவர அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் மூலம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 500 பயனாளிகளுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில், நோன்பு கஞ்சி காய்ச்ச தேவையான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நாகூர் தர்காவிற்கு இஸ்லாமிய மக்கள் பயன்படும் விதமாக தமிழக அரசு ஆண்டுதோறும் 40 டன் சந்தனக்கட்டைகளை வழங்கி வருகிறது. உலமாக்களுக்கு ஓய்வூதியத் தொகையை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்கி, இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஏராளமான உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்தக் கல்வியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 8439 சிறுபான்மை மாணவ மாணவியருக்கு ரூ.1 கோடியே 78 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையித்தின் மூலம் 4 சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சிறு கடன் திட்டம் மூலம் சிறுபான்மையின மக்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து சிறு தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கடன் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் மூலம் 2014-15-ம் ஆண்டுகளில் மாநில அளவில் 7948 பயனாளிகளுக்கு ரூ.2610.92 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக ஏழை எளிய மக்களின் வாழ்வாதரத்தை உயர்துதவற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையின மக்களின் நன்மைக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார் அவர்.

கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் தங்களின் கோரிக்கைகளை மாநில சிறுபான்மையின ஆணையத் தலைவரிடம் முன் வைத்தனர். கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார் பேராயர் டாக்டர் பிரகாஷ்.

கூட்டத்தில் ஆணைய உறுப்பினர்கள் ஜஸ்டின் செல்வராஜ், பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ், ஆணையத்தின் தனிச் செயலாளர் ஆர்.சந்தான கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, துணைக் காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.