அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இடப் பிரச்னை: ஆக்கிரமிப்பு எடுப்பதைக் கண்டித்து பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் இடத்தில் இரு தரப்பிற்கு இடையே உள்ள பொதுப்பாதை பிரச்னையில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்று ஆக்கிரமிப்பு எடுக்கப்படுவதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்தில் விஷம் குடித்தார்.

News image
Updated On :8 நவம்பர் 2015, 7:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் இடத்தில் இரு தரப்பிற்கு இடையே உள்ள பொதுப்பாதை பிரச்னையில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்று ஆக்கிரமிப்பு எடுக்கப்படுவதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்தில் விஷம் குடித்தார். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஊராட்சி துணைத் தலைவர் காயம் அடைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தசரதபெருமாள் (46). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த குருநாதன் (65) என்பவருக்கும் தனியார் இடத்தில், பொது இடப் பிரச்னை இருந்து வருகிறது. இது குறித்த புகார்களின் பேரில், வருவாய்த்துறையினர் இப்பாதையில் ஆக்கிரமிப்பு எடுக்க காவல் துறையினர் பாதுகாப்பை கோரி கடிதம் எழுதியிருந்துள்ளார்கள். அக்டோபர் மாதம் 28-ம் தேதி ஆக்கிரமிப்பு எடுக்கப்பட இருப்பதாக தசரதபெருமாளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் மல்லி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் விஷத்துடன் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் ஆக்கிரமிப்பை முன் அறிவிப்பு இல்லாமல் எடுக்கமாட்டோம் என்று உறுதியளித்ததையைடுத்து அவர் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அன்னம்மாள் தலைமையில் வருவாய்துறையினரும், காவல் ஆய்வாளர் வேணுகோபால் தலைமையில் ஏராளமான போலீஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று இடத்தை அளந்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்துள்ளனர். இதனை தடுக்க தசரதபெருமாள் தரப்பைச் சேர்ந்த மல்லி ஊராட்சி துணைத் தலைவர் தர்மகிருஷ்ணன் உள்ளிட்டோர் முயன்றுள்ளார்கள். அப்போது போலீஸாருக்கும் தர்மகிருஷ்ணன் தரப்பிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தர்மகிருஷ்ணன் காயம் அடைந்தார். போலீஸார் மற்றும் அடியாட்கள் துணையுடன் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு எடுக்கப்படுவதாகக் கூறி தசரதபெருமாள் மனைவி திருவேணி (35) என்பவர் விஷம் குடித்தார். இதனால் அப் பகுதியில் கடுமையான பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து தர்மகிருஷ்ணனையும், திருவேணியையும் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மல்லி ஊராட்சி துணைத் தலைவர் தர்மகிருஷ்ணன் கூறியதாவது: இந்த இப்பிரச்னை தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த வட்டாட்சியர் அன்னம்மாள், தனியார் இடமாக உள்ளதால், நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் அடியாட்கள் மற்றும் போலீஸார் துணையுடன் வந்து பிரச்னைக்குரிய இடத்திலிருந்த சுவர்களை இடித்து தள்ளி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினார்கள். காவல் துறை மற்றும் வருவாய்துறை தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கிராமத்தில் புகுந்து இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.